Wednesday, June 25, 2014

சவுதி அரேபிய விமானத்தில் பயணித்த மலேசிய பெண் மரணம் - இலங்கை வான்பரப்பில் சம்பவம்



இலங்கையின் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த சவுதி அரேபியன் விமானத்தில் பயணித்த மலேசியப் பெண்ணொருவர் மாரடைப்பால் இறந்துள்ளார்.



இதனை அடுத்து அவரின் உடல் இலங்கையிலுள்ள மலேசிய உயர் ஸ்தானிகராலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



இச்சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



மேலும் சவுதி அரேபியாவிலிருந்து மலேசியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சவுதி அரேபியன் வானூர்தியிலேயே அபண் மரணமானதாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் இடம்பெற்ற மரண விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.



46 வயதான இப்பெண்ணின் சடலத்தை மலேசிய உயர்ஸதானிகரகத்தின் ஊடாக மலேசியாவிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது




No comments:

Post a Comment