ஐ.நா மனித உரிமை ஆணையாளராக நியமிக்கப்பட உள்ள முஸ்லிம் இனத்தவரான இளவரசர் இலங்கைக்கு விஜயம் செய்யும் போது இலங்கை தொடர்பில் அவருக்கு தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் இந்த நாட்டில் மிகவும் ஒத்துழைப்புடன் வாழ்ந்து வருகின்றனர்.
சகலரும் இலங்கையர் என்ற இன்னும் சகவாழ்வுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரசின் அதியுயர் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு அமைய சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என எந்த இனத்தவராக இருந்தாலும் பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கத்தோலிக்க உள்ளிட்ட விரும்பிய மதங்களை பின்பற்ற சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்க பொலிஸார் உள்ளனர். கலங்களை தடுக்க இராணுவத்தினர் உள்ளனர் எனவும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment