Thursday, June 19, 2014

'பேருவளையில் சவுதி அரேபியாவின் உதவிகளை பெறும் வெளி அமைப்புக்களும் அங்கு பிரசன்னமாகியிருந்தன'



வெளிநாட்டு உதவிகளை பெற்றுக் கொண்டு நாட்டினுள் செயற்பட்டு வரும், அடிப்படைவாத மத அமைப்புக்கள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணி கோரியுள்ளது.



இந்த கோரிக்கையை தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முசம்மில் விடுத்துள்ளார்.



மதங்கள் மக்களிடையே, பிரச்சினையை ஏற்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்படவில்லை.



பேருவளை மக்களின் கருத்துக்களிலிருந்து கிராம மக்களிடையே, பிரச்சினை ஏற்படவில்லை என்று புலப்படுகின்றது.



நோர்வே, உதவியுடன் செயற்படும் அமைப்புக்களும் அங்கு வந்திருந்தன.



சவுதி அரேபியாவின் உதவிகளை பெறும் வெளி அமைப்புக்களும் அங்கு பிரசன்னமாகியிருந்தன.



இருந்த போதும், இரு தரப்பினதும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கமே ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முசம்மில் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment