Thursday, June 19, 2014

பொதுபல சேனாவின் குற்றச் செயல்களை சட்டமா அதிபர் வேடிக்கை பார்க்கிறார் - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்





சட்ட மா அதிபர் பொதுபல சேனா இயக்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.



பொதுபல சேனா இயக்கத்தினால் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்களை சட்ட மா அதிபர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் சட்டத்தரணி உபுல் ஜயசூரிய குற்றம் சுமத்தியுள்ளார்.



பொதுபல சேனா இயக்கத்தின் குற்றச் செயல்களுக்கு எதிராக சட்ட மா அதிபர் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



அண்மையில் பேருவளை, தர்கா நகர் மற்றும் அலுத்கம பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி உரிய தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்படுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபரிடம் ஏற்கனவே கோரியுள்ளதாக உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment