(Gtn)
அண்மையில் பாரியளவில் கலவரம் இடம்பெற்ற அலுத்கம காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்று நான்கு நாட்களில் காவல் நிலையப் பொறுப்பதிகாரி காவிந்த பியசேகரவிற்கு இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்ற தகவல் வெளியிட்டுள்ளது.
காவல் நிலையத்தின் பிரதம காவல்துறைப் பரிசோதர் ஏ. ஜயம்பதி பதில் காவல் நிலையப் பொறுப்பதியாகரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை. கலவரம் இடம்பெற்ற தினத்தில் பியசேகர கடமையாற்றவில்லை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
ரீ.ஆர். விஜயசேகர என்ற காவல்துறை உத்தியோகத்தரே, சம்பவம் இடம்பெற்ற நாளில் பதில் காவல் நிலையப் பொறுப்பதிகாரியாக கடயைமாற்றியிருந்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுபல சேனா இயக்க உறுப்பினர்கள் சுதந்திரமாக வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட காவல்துறையினர் அனுமதியளித்திருந்தனர் என பல்வேறு தரப்பினர் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஓர் பின்னணியில் குறித்த காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு இடமாற்றத்துடன் கூடிய பதவி உயர்வு வழங்கப்பட்டமை பலரது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
No comments:
Post a Comment