தேர்தல் வாக்குகளைப் பெறுவதற்காகவே முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்த அரசு ஏவி விட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச் செயலரிடம் தெரிவித்துள்ளது.
போர் வெற்றியைக் காட்டி இனி மேலும் சிங்கள மக்களின் வாக்குகளை அரசு பெற்றுக் கொள்ள முடியாது. அதனாலேயே தொடர்ந்தும் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல்கள் ஏவிவிடப்பட்டுள்ளன .
சிங்கள மக்களின் வாக்குகளுக்காகவே தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வில் இன்னமும் அரசு நாட்டமில்லாது இருக்கின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கைக்கு இரு நாள் பயணமாக வருகை தந்துள்ள அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பிரிவில் பணியாற்றும் தெற்காசியாவுக்குப் பொறுப்பான பிரதி உதவிச் செயலர் அதுல் கேசாப்புக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கல நாதன், சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் நடைபெற்றது.
சுமார் ஒரு மணி நேரம் வரையில் நீடித்த இந்தக் கலந் துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் குறித்துக் கூறும் போதே நாடாளுமன்ற உறுப் பினரும், கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேம சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இத்தகைய கலவரங்கள் இடம் பெறுவதை தடுக்காமல் விடுவதும் அந்தக் கலவரங்களைத் தூண்டுவதற்கு காரணமாகின்றது. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்கினால், தனது சிங்கள வாக்கு வங்கி சரிந்து விடும் என்று இலங்கை அரசு கருதுகின்றது. அதனா லேயே தமிழ் மக்களிற்கான எந்தவொரு தீர்வையும் முன் வைப்பதற்கு அரசு தயாராக இல்லை.
No comments:
Post a Comment