Thursday, June 19, 2014

கண்டி – குருந்துகொல்ல பள்ளிவாயல் மீது கல்வீச்சுத் தாக்குதல்



கண்டி – குருந்துகொல்ல பகுதியில் உள்ள ஜும்மா பள்ளிவாயல் மீது இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. தாக்குதல் சம்பவத்தை அறிந்த பொலிஸார் உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்து பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர்.



தாக்குதலை அடுத்து பிரதேசவாசிகள் பள்ளிவாயல் பகுதியில் ஒன்றுகூடியுள்ளதாகவும் தாக்குதலால் ஏற்பட்ட பதற்றம் சகஜ நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



கல்வீச்சுத் தாக்குதலால் பள்ளிவாயல் கண்ணாடிகள் மற்றும் சுவருக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் பேருவளை- அளுத்கம- தர்காநகர் தாக்குதல்களை கண்டித்து முஸ்லிம்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


No comments:

Post a Comment