Friday, June 20, 2014

முஸ்லிம்களின் அமைதிவழி ஹர்த்தாலை அமெரிக்காவிடம் பெருமையாக கூறிய ஹக்கீம்





நாட்டுக்குள் காணப்படும் மோதலான நிலைமையை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் 20-05-2014 நடத்தப்பட்ட ஹர்த்தாலை அமைதியான முறையில் நடத்தியமையை பாராட்டுவதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.



இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்கள் தொடர்பான உதவி இராஜாங்க செயலாளர் ஒஸ்கார் பேர்டினேன்டிஸ் ட்ரான்கோவை தனது அமைச்சில் சந்தித்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் ஹக்கீம் இதனை குறிப்பிட்டுள்ளார்.



மாவனல்லை நீதிமன்ற வளாகத்தில் இரண்டு பொலிஸார் மீது திராவகம் வீசடப்பட்டமை மற்றும் வட்டரெக்க விஜித தேரர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பன சட்டத்தின் ஆதிக்கம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.



இந்த சம்பவங்கள் குறித்து உரிய விசாரணைகளை நடத்தப்படும் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.



அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் அண்மையில் நடந்த சம்பவங்கள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட தரப்பினர் குறித்தும் அமெரிக்க பிரதிநிதிக்கு விளக்கியதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.



இந்தச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண அமைச்சருமான ஹாபீஸ் நஸீர் அஹமதும் கலந்துகொண்டார்.




No comments:

Post a Comment