Thursday, June 5, 2014

'முற்றுமுழுதாக ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படுவதனை ஏற்கமுடியாது'



நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கக் கூடாது என சிறுபான்மை கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.



நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாகத் தெரிவித்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு தரப்புக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என மூன்று சிறுபான்மை கட்சிகள் தெரிவித்துள்ளன.



நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்வது குறித்து இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.



எனவே, தற்போதைக்கு இது குறித்து தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை. முற்றுமுழுதாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. எனினும், சில மாற்றங்கள் செய்யப்படுவதனை எதிர்க்கவில்லை என ஹசன் அலி தெரிவித்துள்ளார்.



இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளன.






No comments:

Post a Comment