Thursday, June 5, 2014

தற்பாதுகாப்புக்காக எகிப்தியரை கொலை செய்த இலங்கை பெண் - குவைத்தில் சம்பவம்



தற்பாதுகாப்புக்காக எகிப்தியர் ஒருவரை கொலை செய்ததாக கூறப்படும் இலங்கை பெண் ஒருவரை குவைத் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்த சம்பவம் குவைத்தின் ஹாவாலி என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.



தொடர் மாடி ஒன்றில் சத்தம் கேட்டதை தொடர்ந்தும் பொதுமக்கள் அங்கு சென்ற போது குறித்த எகிப்தியர் இரத்தம் தோய்ந்த நிலையில் வீழ்ந்து கிடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதன்போது ஓடி தப்பிக்க முயற்சித்த இலங்கை பெண் ஒருவரை பொலிஸார் கைதுசெய்தனர்.



இதன்போது வாக்குமூலம் அளித்த பெண், குறித்த எகிப்தியர் தம்மை பாலியல் வல்லுறவு செய்ய முயற்சித்தார் என்றும், அதனை தடுக்கவே தாம் தாம் அவரை தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



இது தற்செயலான சம்பவம் என்று குறித்த இலங்கை பெண் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment