ஆளும் கட்சியினரே இனவாத முரண்பாடுகளை தூண்டுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீ.ஹரிசன் குற்றம் சுமத்தியுள்ளார்.
பேருவளை, அளுத்கம சம்பவங்களுடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அல்லது வேறும் தரப்பினருக்கோ தொடர்ப இருந்திருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருப்பார்கள்.
வன்முறை சம்பவத்தில் ஆளும் கட்சியுடன் தொடர்புடையவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
இன, மத வன்முறைகளுடன் அரசாங்கத்திற்கு தொடர்பு இருப்பதாக ஆளும் கட்சி அமைச்சர்கள் பகிரங்கமாக ஒப்பக்கொண்டுள்ளனர். இதனை விடவும் வேறும் சாட்சிகள் அவசியமில்லை.
அரசாங்கத்தின் உயர் பதவிகளை வகித்து வரும் முக்கிய தலைவர்களே இன, மதவாத அமைப்புக்களை வழி நடத்துகின்றனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நியாயங்களை முன்வைத்தாலும், சம்பவங்கள் இடம்பெறுவதற்கு அரசாங்கமே காரணம்.
ஐக்கிய தேசியக் கட்சி இன சமூகங்களை ஐக்கியப்படுத்தும் கட்சியாகும்.
தமிழ் முஸ்லிம் மக்கள் அதிகளவில் ஐக்கிய தேசயிக் கட்சிக்கே ஆதவரளிக்கின்றனர்.
கட்சியின் தவிசாளர் பதவியை முஸ்லிம் ஒருவரும், பொருளாளர் பதவியை தமிழர் ஒருவரும் வகித்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment