உள்ளுராட்சி மன்ற அலுவல்கள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா பதவி விலக வேண்டுமென மாத்தளை நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 27ம் திகதி இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளின் கொடுப்பனவு உயர்த்தப்பட வேண்டியதில்லை எனவும், பிரதிநிதிகள் சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதிப்பதாகவும் அமைச்சர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சரின் இந்தக் கருத்து கண்டிக்கப்பட வேண்டியது எனத் தெரிவித்து மாத்தளை நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பதில் நகரசபைத் தலைவர் பாலித ஜயசேகர தலைமையில் இந்த தீhமானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாட்டில் 350 உள்ளுராட்சி மன்றங்களில் 4500 உறுப்பினர்கள் கடயைமாற்றி வருகின்றனர் என ஆளும் கட்சி உறுப்பினர் ரொசான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதில் 2100க்கும் மேற்பட்டவர்கள் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள். இந்தக் காரணிகளை கவனத்திற் கொள்ளாது அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து கண்டிக்கப்பட வேண்டியது.
செய்யும் தொழில்களை விட்டு அரசியலுக்கு வந்த தமக்கு கூலித் தொழிலாளி ஒருவருக்கு வழங்கும் சம்பளத்தில் நான்கில் ஒரு பகுதியே வழங்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அமைச்சு தொடர்பில் அனுபவமற்ற காரணத்தினால் அதாவுல்லா இவ்வாறு கருத்துக்களை வெளியிட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நகரசபை உறுப்பினர் டல்ஜித் அலுவிகாரே தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment