Thursday, June 19, 2014

''பௌத்தர்களை ஆத்திரமூட்டும் முஸ்லிம்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்' ஹெல உறுமய



சிங்கள வர்த்தக நிலையங்கள், பௌத்த வழிபாட்டுத் தலங்களுக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்குமாறு ஜாதிக ஹெல உறுமய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.



அளுத்கம, பேருவளை, தர்கா நகர் போன்ற பகுதிகளில் ஏற்பட்ட பதற்ற நிலை மற்றும் கலவர சம்பவங்களை அடுத்து நிலைமையை கட்டுப்படுத்த சகல தரப்பினருடனும் ஏற்படுத்திக் கொண்ட இணக்கத்தை மீறி, முஸ்லிம் அடிப்படைவாத குழுக்கள், தொடர்ந்தும் சிங்கள வர்ததக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.



வெலிப்பன்ன பிரதேசத்திற்கு கடந்த 16 ஆம் திகதி இரவு 10 வான்களில் வந்த முஸ்லிம் குழுவினர் சிங்களவர்களின் வர்த்தக நிலையங்களை தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். தாக்குதல் நடத்த வந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



வெளியிடங்களில் இருந்து வந்தவர்கள் இந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.



இவர்களுக்கு எதிராக உடனடியாக சட்டத்தை அமுல்படுத்தி நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருமாறு பாதுகாப்பு தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.



சிங்களவர்களின் வர்த்தக நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.



தொடர்ந்தும் சிங்கள பௌத்த மக்களை ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் அடிப்படைவாத குழுக்கள் மற்றும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை உடனடியாக செயற்படுத்தி பிரதேசத்தில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பொறுப்புக் கூறவேண்டிய சகலரிடமும் வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment