Tuesday, July 1, 2014

பேருவளையில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி - 'சிங்களவரை கைதுசெய்யும் உரிமை பொலிஸாருக்கு இல்லை'



பேருவளையில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக பொதுபல சேனா இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது. தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளின் முக்கிய களமாக பேருவளை காணப்படுகின்றது என தெரிவித்துள்ளது. மத வழிபாடுகளையும் மத நிகழ்வுகளையும் நடாத்தும் போர்வையில் இவ்வாறான குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.



தற்பாதுகாப்பு நோக்கில் பொல்லுகளை எடுத்து தாக்குதல் நடத்திய சிங்கள இளைஞர்களை கைது செய்யும் உரிமை காவல்துறையினருக்கு கிடையாது என சுட்டிக்காட்டியுள்ளது. காவல்துறையினரோ, எதிர்க்கட்சிகளோ அல்லது அரசாங்கமோ பொதுபல சேனா மீது கை வைப்பதனை தவிர்த்துக்கொள்ளுமாறு கோரியுள்ளது. ஏனெனில், அவ்வாறு கை வைத்தால் ஆபத்து கை வைக்கும் தரப்பினருக்கே என சுட்டிக்காட்டியுள்ளது.



காத்தான்குடி, மட்டக்குளிய, அக்கரைப்பற்று, கல்முனை போன்ற பகுதிகளில் முஸ்லிம் கடும்போக்குவாதம் பரவி வருவதாகவும், ஹட்டனில் இந்துக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டு வருவதாகவும் பொதுபல சேனா குற்றம் சுமத்தியுள்ளது.




No comments:

Post a Comment