Saturday, August 23, 2014

ஒல்லியாக மாறவேண்டும் என்பதற்காக, மகளுக்கு நாடாப்புழு முட்டைகளை கொடுத்த தாய்..!



அமெரிக்காவில் சமீபத்தில் ஒரு இளம்பெண் தீவிர வயிற்றுவலி அறிகுறியுடன் புளோரிடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கர்ப்பமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின்பேரில் அவருக்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் முடிவு எதிர்மறையாக வந்தது. இருப்பினும் அவரது குடல்கள் தொடர்ந்து வீங்கி காணப்பட்டதால் நோய்க்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் மருத்துவர்கள் தடுமாறினர்.



அதன்பின்னர் அந்தப் பெண் கழிப்பறைக்குச் சென்றுவந்தபின்னரே அவர்களால் உண்மையான காரணத்தைக் கண்டறிய முடிந்தது. அந்தக் கழிப்பறையின் கிண்ணம் முழுவதும் நாடாப்புழுக்கள் நிறைந்திருந்ததாகவும் அவற்றுள் சில நன்கு வளர்ந்து காணப்பட்டதாகவும் அவருக்கு பணி புரிந்துவந்த மரிக்கர் கப்ரால் ஓசொரியோ என்ற செவிலியர் தொலைக்காட்சி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து விசாரித்தபோது அழகிப்போட்டி அணிவகுப்பு ஒன்றில் தனது மகள் பங்கு பெற இருந்ததால் ஒல்லியாக மாறவேண்டும் என்பதற்காக நாடாப்புழுக்களின் முட்டைகளை அவளுக்கு அளித்ததாக அவரது தாயார் தெரிவித்துள்ளார். இந்த முட்டைகளை மெக்சிகோவில் வாங்கியதாகக் கூறிய அவர், தனது தவறுக்காக மகளிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார் என்று தகவல்கள் தெரிவித்தன.



ஆனால், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டதா? இல்லையா? என்பது தெரியவில்லை.


No comments:

Post a Comment