Saturday, August 23, 2014

உலகில் கெட்ட மனிதர்கள் பட்டியல்


வரலாற்று காலம் முதல் இதுவரை உலகில் இருக்கும் மிக மோசமான கெட்ட மனிதர்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 26 வது இடத்தில் உள்ளார்.



பல்வேறு துறைகளில் இருக்கும் எந்த நபராக இருந்தாலும் மக்களின் விருப்பத்திற்கு அமைய உலகளாவிய ரீதியில் தரப்படுத்தலை மேற்கொள்ளும் தி. ருன்கர் என்ற அமைப்பு உலகில் மிக மோசமான கெட்ட மனிதர்கள் பட்டியலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தரப்படுத்தியுள்ளது.



உலக மக்களின் வாக்கெடுப்பில் மூலம் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்படுகிறது என்பது இங்கு முக்கியமானது.



வரலாற்று காலம் முதல் இன்று வரை உலகில் உள்ள கெட்ட மனிதர்கள் என்ற இந்த தரப்படுத்தலில், இனப்படுகொலையாளர்கள், சர்வாதிகாரிகள், திரிபுப்படுத்த தர்ம உபதேசங்களை செய்தவர்கள், விசர்தனமாக அரசியல் வாதிகள் ஆகியோர் உள்ளடக்கப்படுகின்றனர்.



தமது சமதர்ம கொள்கைக்கு எதிராக செயற்பட்டார் என்ற காரணத்தினால் தனது சகாவான ட்ரொக்ஸ்கி என்பவரை பனி பாறைகளை உடைக்கும் கோடாரியில் வெட்டிக் கொலை செய்த மற்றும் தனது கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த பிராந்தியம் ஒன்றுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்காது லட்சக்கணக்கானவர்களின் மரணத்திற்கு காரணமான சோவியத் ரஷ்யாவின் முன்னாள் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலின் இந்த தரப்படுத்தலில் முதலிடத்தில் உள்ளார்.



ஜோசப் ஸ்டாலியின் செம்படையினரால் தோற்கடிக்கப்பட்ட லட்சக்கணக்கான யூதர்களை கொலை செய்த ஜேர்மனியின் முன்னாள் சர்வாதிகாரி அடோல் ஹிட்லர் இரண்டம் இடத்தில் உள்ளார்.



இவர்களை தவிர போல்போட், இடி அமீன், மாவோ சேதுங், ஒசாமா பின் லேடன், கிம் ஜோன் ஹில், ஹென்ரிச் ஹிம்லர், சாதம் உசைன், போனிட்டோ முசோலினி, ஆகியோர் வரிசைப்படுத்தல் படி முதல் பத்து இடங்களில் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.







No comments:

Post a Comment