Friday, August 22, 2014

பொதுபல சேனாவுக்காக பாலித தேவப்பெருமவை கௌரவிப்பதை, இரகசியம் காத்த முஸ்லிம் மீடியா போரம்


அளுத்கமயில் பௌத்தசிங்கள இனவெறியர்களினால் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளின் போது தனது உயிரையும் துச்சமாக மதித்து போராடிய பாலித தேவப்பெரும் எம்.பி.யை இலங்கை முஸ்லிம்களின் சார்பில் சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரம் கௌரவிக்கவுள்ளது.



இன்று சனிக்கிழமை, 23 ஆம் திகதி முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடு நடைபெறுகிறது. இதன்போதே பாலித தேவப்பெரும எம்.பி. கௌரவிக்கப்படவுள்ளதாக முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.



பாலிதா தேவப்பெரும எம்.பி.யை கௌரவிக்கும் நிகழ்வை இறுதிவரை இரகசியமாக வைத்திருக்கவே முஸ்லிம் மீடியா போரம் விரும்பியுள்ளது. முஸ்லிம் மீடியா போரம், முஸ்லிம்களுக்காக பாடுபட்ட பாலித தேவப்பெரும எம்.பி.யை கௌரவிக்கிறது என்ற விவகாரம் முன்கூட்டியே பகிரங்கப்படுத்துமிடத்து அதனை பொதுபல சேனா குழப்பி விடலாம் என்பதாலேயே இறுதிவரை இரகசியம் காக்கப்பட்டதாகவும் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.



அண்மைய காலங்களில் நாட்டில் பல்வேறு நிகழ்வுகளையும் பொதுபல சேனா உள்ளிட்ட பௌத்த பிக்குகள் குழப்பியடித்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment