Saturday, August 30, 2014

ஊவா மாகாண முஸ்லிம்களின் வாக்கு, மஹிந்த தலைமையிலான கூட்டமைப்பிற்கே - அஸ்வர்



நடைபெறவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலில் அம்மாகாணத்தில் வசிக்கும் அனைத்து முஸ்லிம்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கே தமது வாக்குகளை வழங்குவர் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் கூறினார்.



குறிப்பாக பதுளை வாழ் முஸ்லிம்கள் இந்த அரசாங்கத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர்.



அதனால் எதிரணியினரினது பொய்ப்பிரசாரங்களை அவர்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் எனவும் அஸ்வர் தெரிவித்தார். அஸ்வர் எம்.பி ஊவாவில் தேர்தல் பிரசாரப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அவர் அங்கு சூறாவளிப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment