Saturday, August 30, 2014

இலங்கையில் சூடு பிடிக்கும் தேள் வியாபாரம்..!



தேள் ஒன்று 10 ஆயிரம் முதல் அதற்கும் மேற்பட்ட தொகைக்கு விற்பனை செய்யும் வியாபாரம் நாட்டில் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



தேள்களை விற்பனை செய்ய முயற்சித்த மற்றும் அதனை கொள்வனவு செயய முயற்சித்த சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.



பரிசோதனைகள் மற்றும் செல்லப்பிராணிகளாக வளர்க்க சில நாடுகள் தேள்களை கொள்வனவு செய்வதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக தேள்கள் பிடிக்கப்பட்டு இவ்வாறு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.



இலங்கையில் ஏற்கனவே முதலை பல்லிகள் பிடித்து விற்பனை செய்யும் வியாபாரம் நடைபெற்று வருகிறது. அத்துடன் காட்டில் உள்ள யானைக்குட்டிகள் பிடிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.



இந்த நிலையில், தற்போது தேள் விற்பனை சந்தைக்கு வந்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment