Wednesday, August 27, 2014

ISIS போராளியான அமெரிக்கர், சிரிய மோதலில் பலி



ஈராக், சிரியாவின் கணிசமான நிலப்பகுதியை கைப்பற்றியிருக்கும் ஐ.எஸ். எனப்படும் இஸ்லாமிய தேசம் கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து போராடியதாக சந்தேகிக்கப்படும் அமெரிக்க பிரiஜ ஒருவர் சிரியாவில் கொல்லப்பட்டுள்ளார்.



முன்னர் பாடல் கலைஞராக இருந்த 33 வயது டக்லஸ் மக்கைன் என்பவரே கொல்லப்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது. ஒரு தசாப்தத்திற்கு முன்னர் கிறிஸ்தவத்தில் இருந்து இஸ்லாத்திற்கு மதம்மாறியிருக்கும் இவர், அல் கொய்தா கிளையான அல் நுஸ்ரா முன்னணியுடனான மோதலின்போதே கொல்லப்பட்டுள்ளார்.



சிரியாவில் இடம்பெறும் உள்நாட்டு யுத்தத்தில் குறைந்தது 50 நாடுகளைச் சேர்ந்த சுமார் 12,000 வெளிநாட்டு போராளிகள் பங்கேற்றிருப்பதாக அமெரிக்க இராஜhங்கத் திணைக்களம் கணித்துள்ளது. இதில் சுமார் 100 அமெரிக்க பிரiஜகள் பங்கோற்றிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.



கடந்த மே மாதத்தில் 22 வயதான அமெரிக்கர் ஒருவர் சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டிருந்தார். சிரிய யுத்தத்தில் இணைவதற்காக அங்கு செல்ல முயன்ற அமெரிக்க பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்;.


No comments:

Post a Comment