Wednesday, August 27, 2014

ISIS டன் இணைந்திருந்த 15 அவுஸ்திரேலியர்கள் மரணம்



ஈராக் மற்றும் சிரியாவை மையப்படுத்தி தாக்குதல்களை நடத்தி வரும் ஐ.எஸ். முஸ்லிம் வாதிகளுடன் இணைந்து 15 அவுஸ்திரேலியர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



சர்வதேச புலனாய்வாளர்களின் அறிக்கைகள் இதனைத் தெரிவித்துள்ளன.



அவர்களில் இரண்டு பேர் தற்கொலை குண்டுதாரிகளாகவும் செயற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.



கென்பரா அரசாங்கம் இது தொடர்பில் நடத்திய விசாரணைகளில் 60க்கும் அதிகமான அவுஸ்திரேலிய பிரஜைகள், இவ்வாறான ஜிஹாடீஸ்ட் வன்முறை குழுக்களில் இணைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.



ஐ.எஸ்.அமைப்பு தற்போது சர்வதேச நாடுகள் பலவற்றுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளமையை இது எடுத்துக் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஏற்கனவே பிரித்தானியாவைச் சேர்ந்த முஸ்லிம்களும் இவ்வாறு ஜிஹாடிஸ்ட் குழுக்களுடன் இணைந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment