ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் முன்னாள் வடக்கு-கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான முழக்கம் அப்துல் மஜீத், கல்முனை மாநகர சபை உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
கல்முனை மாநகர முதல்வர்- சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர் முன்னிலையில் இன்று புதன்கிழமை பிற்பகல் இவர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
இது தொடர்பான விசேட நிகழ்வு கல்முனை மாநகர சபையில் அமைந்துள்ள முதல்வர் செயலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத் அலி, நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.அசுஹர், முதல்வரின் செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வில் முழக்கம் அப்துல் மஜீத் கலந்து கொண்டு கன்னியுரை நிகழ்த்தினார். இதன்போது முதல்வர் உட்பட ஆளும், எதிர்த் தரப்பு உறுப்பினர்கள் பலரும் புதிய உறுப்பினர் மஜீதை வரவேற்று வாழ்த்துரை நிகழ்த்தினர்.
கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிபின் உறுப்பினர் வெற்றிடத்திற்கு முழக்கம் மஜீதை முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் உறுப்பினராக நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment