'என்னுடைய சப்பாத்து ஜோடியை, இங்கிலாந்திலுள்ள நிறுவனமொன்று 1,000 மில்லியன் டொலர்களுக்கு (13,200 கோடி ரூபா) கேட்கிறது. இது தொடர்பில், இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் எனக்கு அறிவித்தது.
இருப்பினும், அவற்றை கொடுப்பதா, இல்லையா என்று நான் இன்னமும் தீர்மானிக்கவில்லை.
இந்த சப்பாத்தை ஏலத்தில் விட்டால், நல்லதொரு வருமானத்தை ஈட்டலாம்' என்று கலாசார அமைச்சர் டி.பீ.ஏக்கநாயக்க தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த சப்பாத்து ஜோடி உலகப் பிரபலம் பெற்றுள்ளது.
அடிகள் கழன்றுள்ள இந்த சப்பாத்தை அணிந்தே, கடந்த சில தினங்களுக்கு முன், இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சீன ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர் சென்று அமர்ந்திருந்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர்,
என்னுடைய சப்பாத்து ஜோடி மிகவும் பழையது. சீன ஜனாதிபதியை சந்திக்கும் போது நான் அணிந்திருந்த வெள்ளை நிற ஆடைக்கு ஏற்ற வகையில் இந்த வெள்ளை நிற சப்பாத்து ஜோடியை அணிந்து சென்றேன்.
இவற்றை நான் நீண்ட காலமாக அணிந்திருக்கவில்லை. சீன ஜனாதிபதி வந்த போதே அணிந்தேன். அதனால், அவற்றின் அடிகள் கழன்றிருப்பதை நான் அறிந்திருக்கவில்லை.
இதனால், அவற்றை அணிந்து சென்றேன். போகும் வழியில் அடிகள் கழன்றுவிட்டன. இருப்பினும், சப்பாத்தை மாற்றிக்கொண்டு செல்வதற்கான நேரம் போதாமையால் அப்படியே சென்றுவிட்டேன்.
No comments:
Post a Comment