ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் வாதிகள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக்கின் துலுயியா (Tuluya) நகரம் கடந்த 2 மாதங்களாக ஐ.எஸ்.ஐ.எஸ் வாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த நகரத்தை மீட்பதற்காக அந்நாட்டு ராணுவம் நேற்று முன்தினம் ஐ.எஸ்.ஐ.எஸ்-யுடன் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த மோதலின் போது ஐ.எஸ்.ஐ.எஸ் வாதிகள் ரசாயன ஆயுதங்கள் மூலமாக ஈராக் ராணுவத்தைத் தாக்கியதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
மேலும் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் சோடியம் சயனைடு (Sodium Cynide) ரொக்கெட்டுகளைத்தான் ஐ.எஸ்.ஐ.எஸ் வாதிகள் ஏவியிருக்கக் கூடும் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment