Monday, September 15, 2014

1989 ஜனாதிபதி தேர்தலின்போது ISIS போன்றுதான் தண்டனை வழங்கப்பட்டன - சுசில் பிரேம்ஜெயந்த



ஊவா மாகாண சபைத் தேர்தலையொட்டி ஐ. ம. சு.மு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. இங்கு அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த கூறியதாவது,



ஊவாவில் உளரீதியான தாக்குதல் நடத்த தயாராவதாக எதிர்க்கட்சி கூறி வருகிறது. 1989 ஜனாதிபதி தேர்தலின்போது இப்பகுதியில் உள்ள 42 வாக்குச்சவடிகளில் வாக்கெடுப்பு இடம் பெறவில்லை.



வாக்காளர்களும் தேர்தல் அதிகாரிகளும் சுடப்பட்டனர். இன்று தேர்தல் அலுவலகங்கள் தாக்கப்படுவது போன்ற சிறுசிறு சம்பவங்கள் அன்று நடந்தவை. ஐ. எஸ். ஐ. எஸ். அமைப்பு போன்று தான் தண்டனை வழங்கப்பட்டன. உளரீதியான தாக்குதல் அன்று தான் இடம்பெற்றன.



எதிர்வரும் பிரதான தேர்தல்களின்போது உள ரீதியான தாக்குதல் முன்னெடுக்க எதிர்கட்சி தயாராகிறதா? கடந்த கால சம்பவங்களை மறந்து’ பேசுகின்றனர். ஏனைய மாகாண சபைத் தேர்தல்கள் நடந்த சூழ்நிலையுடன் ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் விசேடமான எதுவும் நடந்து விடவில்லை.


No comments:

Post a Comment