இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) வாதிகளால் டேவிட் ஹெய்ன்ஸ் தலை துண்டிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டதற்கு இஸ்லாம் மதத்தின் மீது பழி சொல்லக் கூடாது என்று அவரது சகோதரர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
பிரிட்டனைச் சேர்ந்த டேவிட் ஹெய்ன்ஸ் எனும் தொண்டு நிறுவன ஊழியரை ஐ.எஸ். வாதிகள் தலையைத் துண்டித்துப் படுகொலை செய்தனர். இதன் விடியோ காட்சி சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
இதையடுத்து, அவரது சகோதரர் மைக் ஹெய்ன்ஸ் பிரிட்டிஷ் செய்தியாளர்களை லண்டனில் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியது:
சமூகத்தின் ஒவ்வொரு நிலையிலும் தீவிரவாதம் அதிகரித்து வருகிறது. அது இனம், மதம், அல்லது அரசியல் சார்ந்த விஷயமாக மட்டும் காணக் கூடாது. மனிதர்களைக் குறித்த பிரச்னையாக அதைக் காண வேண்டும்.
ஐ.எஸ். இயக்கம் மிகவும் பயங்கரமானது. உலகில் அனைத்து நாடுகளுக்கும், அனைத்து மதங்களுக்கும், அனைத்து விதமான அரசியல் நடவடிக்கைகளுக்கும், எல்லா மக்களுக்கும் அது அச்சுறுத்தலாக உள்ளது.
ஐ.எஸ். நடவடிக்கைகளுக்கு இஸ்லாம் மதத்தைப் பழிக்கக் கூடாது. மேற்கு ஆசிய நாட்டு வம்சாவளியினரையும் இதற்காகக் குறை கூறக் கூடாது.
ஜிஹாதில் கலந்து கொள்வதற்காக வெளிநாடு சென்றதாகக் கூறப்படும் பிரிட்டிஷ் முஸ்லிம்கள் நாடு திரும்பும்போது, அவர்களின் செயல்களுக்கான விளைவ சந்திக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment