Monday, September 15, 2014

ISIS க்கு இங்கிலாந்து வீரர் மொய்ன்அலி கண்டனம்





சிரியா, ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த தீவிரவாதிகள் அமெரிக்க பத்திரிகை நிருபர்கள் ஜேம்ஸ் போலே, ஸ்ட்வன் சாட்லாப் ஆகிய இருவர் தலையை துண்டித்து கொன்றனர்.



இதன் தொடர்ச்சியாக சிரியாவில் பிணை கைதியாக பிடித்து வைத்து இருந்த இங்கிலாந்து தொண்டு நிறுவன ஊழியர் டேவிட் ஹெயஸ் தலையை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் தலையை துண்டித்து படு கொலை செய்தனர்.



ஐ.எஸ்.ஐ.எஸ். வாதிகளின் இந்த செயலுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொய்ன்அலி கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–



ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரின் இந்த செயலை இஸ்லாம் அனுமதிக்காது. அந்த அமைப்பின் நடவடிக்கைகளை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாது. மற்ற மதத்தின் மக்களை கொல்வது கண்டனத்துகு உரியதாகும். இங்கிலாந்தில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் அந்த அமைப்புக்கு ஆதரவு கொடுக்காது.



இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த மொய்ன் அலி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் காசாவுக்கு ஆதரவாக பேண்ட் அணிந்த வாசகத்துடன் ஆடி இருந்தார். இதற்காக அவர் நடுவரால் எச்சரிக்கப்பட்டு இருந்தார்.


No comments:

Post a Comment