இலங்கையில் இன முரண்பாடுகளை தூண்டும் நோக்கம் நோர்வே அரசாங்கத்திற்கு கிடையாது என இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிரிட்டி லோஸன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இன ரீதியான பதற்றங்களை உருவாக்கும் எவ்வித நோக்கமும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுயகௌரவம், பல்வகைத் தன்மை போன்றவற்றை நோர்வே அரசாங்கம் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
நோர்வே அரசாங்கம் கடும்போக்குடைய அமைப்புக்களை ஊக்குவிப்பதாகவும், இன முரண்பாடுகளை தூண்டுவதாகவும் இலங்கை ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இலங்கையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் எவ்வித நோக்கங்களும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய சமாதானப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஊடகங்களும் பங்களிப்பு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment