மேற்கு ஆபிரிக்க பிராந்திய வலய நாடுகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
பிராந்திய வலய நாடுகளில் பரவி வரும் எபோலா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கையுறைகளை ஜனாதிபதி நன்கொடையாக வழங்கியுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைப் பிரதிநிதி கலாநிதி பிர்தோசியிடம் 18-09-2014 மாலை கொழும்பில் வைத்து, ஜனாதிபதி இந்த கையுறைகளை வழங்கியுள்ளார்.
எபோலா வைரஸ் காரணமாக ஆபிரிக்க நாடுகளில் 2500 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
எபோலா வைரஸ் உலகப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா அண்மையில் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment