Saturday, February 22, 2020

மன்னார் பிரதேசத்தில் 2000 தமிழ்ப்பெண்கள், இஸ்லாமியர்களைத் திருமணம் செய்துள்ளனர்

மன்னார் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 26 தமிழ் பெண்கள் முஸ்லிம் இளைஞர்களைத் திருமணம் செய்துள்ளனர். 12 தமிழ் இளைஞர்கள் முஸ்லிம் பெண்களைத் திருமணம் செய்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் 2018ஆம் ஆண்டு மாவட்டச் செயலகம் பிரதேச செயலக ரீதியாக திரட்டிய தரவுகளின்படி இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 71 ஆயிரத்து 868 முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அவர்களில் 34 ஆயிரத்து 494 பேர் ஆண்கள். 37 ஆயிரத்து 374 பேர் பெண்கள்.

71 ஆயிரத்து 868 முஸ்லிம்களில் 69 ஆயிரத்து 854 பேரே இஸ்லாமியர்கள். அவர்களில் 34 ஆயிரத்து 506 பேர் ஆண்கள். 35 ஆயிரத்து 348 பேர் பெண்கள்.

2 ஆயிரத்து 26 தமிழ்ப் பெண்கள் முஸ்லிம் இளைஞர்களை திருமணம் செய்துள்ளனர். 12 தமிழ் இளைஞர்கள் முஸ்லிம் பெண்களைத் திருமணம் செய்துள்ளனர் என்று அந்தத் தரவுகள் கூறுகின்றன.

No comments:

Post a Comment