Saturday, February 22, 2020

சஜித்திற்கு நிதி தொடர்பாக, எந்த அறிவும் இல்லை - பந்துல

குறை நிரப்பு பிரேரணையை தோற்கடித்தன் மூலம் எதிர்க்கட்சித் தலைவரின் நிதி தொடர்பான அறிவு நன்றாக தெரியவந்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் நிதி தொடர்பாக எந்த அறிவும் இல்லாத நடந்ததுக்கொண்ட முதல் சந்தர்ப்பம் இது எனவும் அவர் கூறியுள்ளார். அரச செய்தி திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் செலுத்த வேண்டிய அனைத்து கட்டணங்களையும் செலுத்துவதற்காக இந்த குறை நிரப்பு பிரேரணை கொண்டு வரப்பட்டது.

வரவு செலவு இடையிலான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக பொறுப்புக் கூறுவது நாடாளுமன்றத்தின் கடமை.

இதனை நிறைவேற்ற எதிர்க்கட்சித் தலைவரால் முடியாது என்றும் அரசுக்கு சேவைகளை வழங்கியவர்கள் தற்கொலை செய்துக்கொள்ள நேரிடும் எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment