Wednesday, February 19, 2020

முஸ்லிம்கள் வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் முஸ்லிம்களுடைய விடயங்களை நிறைவேற்றி வை தில் மும்முரமாக இருக்கிறோம்

இக்பால் அலி
முஸ்லிம்கள் வாக்களித்தாலும் வாக்களிக்கா விட்டாலும் முஸ்லிம்களுடைய தேவைகளை நிறைவேற்றி வைப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் பொதுச் செயலாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் பொதுச் செயலாளர் அப்துல் சத்தார் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் 
சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் பல வருடங்களாக பலரை நம்பி இது சம்மந்தமான நடவடிக்கைகளை சாய்ந்தமருது மக்கள் முன்னெடுத்தார்கள். சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலின் தலைமையிலான நிர்வாகத்துடன் ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கம் வந்தால் நிச்சயமாக உள்ளுராட்சி மன்றத்தைப் பெற்றுத் தருவோம் என்று பகிரங்கமான முறையில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டன
அந்த அடிப்படையில் முஸ்லிம்கள் வாக்களித்தாலும் வாக்களிக்காமல் விட்டாலும் முஸ்லிம் விடயங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணி மிகவும் உன்னிப்பாக அவதானித்து முஸ்லிம்களுடைய தேவைகளை நிறைவேற்றித் தருவதில் நாங்கள் மிகவும் மும்முரமாக இருக்கிறோம். 
ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் செயலாளர் என்ற வகையில் நான் இந்த அரசாங்கத்துக்கும் விசேடமாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களுக்கும்  நன்றி தெரிவிக்கின்றேன். சாய்ந்தமருது மக்கள் உள்ளுராட்சி சபை தனியாகப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சாய்ந்தமருது மக்கள் அரசியலில் பலரை நம்பி இது சம்மந்தமாக பல விடயங்களை முன்னெடுத்தார்கள். இருந்தாலும் சாய்ந்தமருது சம்மேளனத்தின் தலைவர் உட்பட குழுவினர்களுடன் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில நடத்திய பேச்சு வார்த்தையில் கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்தால்  சாய்ந்தமருதுக்கு நகர சபை தருவதாக வாக்குறுதியளித்தார். அதன் அடிப்படையில் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்குவதற்காக வர்த்தமானி அறிவித்தல் தற்போது விடுக்கப்பட்டுள்ளது. 
முஸ்லிம்கள் வாக்களித்தாலும் வாக்களிக்கா விட்டாலும்  ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் பெரமுன இந்த அரசாங்கத்திடம் இருந்து முஸ்லிம்களுடைய தேவைகளை முஸ்லிம்களுடைய விடயங்களை நிறைவேற்றி வைப்பதில் மிகவும் மும்முரமாக இருக்கிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இக்பால் அலி
19-02-2020

No comments:

Post a Comment