Saturday, February 22, 2020

இலங்கையின் படைவீரர்கள் கடுமையான தீவிரவாதத்தில் இருந்து நாட்டை மீட்டனர்

இறையாண்மை உள்ள நாடு ஒன்றின் தலைவரால் நியமிக்கப்படும் இராணுவத் தளபதியின் மீது குற்றம் சுமத்தப்படுவது சுயாதீன நீதிமுறைக்கு முரணான செயலாகும் என அமெரிக்காவுக்கான இலங்கை தூதர் ரொட்னி பெரேரா தெரிவித்துள்ளார்.

வோஷிங்டனில் இந்த வார ஆரம்பத்தில் இலங்கையில் முன்னர் சேவையாற்றிய தூதுவர்கள் மற்றும் சிரேஸ்ட அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்வொன்று இடம்பெற்றிருந்தது.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

மரியாதைக்குரிய நிர்வாகத்தின் ஊடாக இறைமையுள்ள பாதுகாப்பான நாடு ஒன்றை நோக்கியே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பார்வை உள்ளது.

அமெரிக்காவை பொறுத்த வரையில் அது இராணுவத்தில் உள்ள ஆண்களையும், பெண்களையும் மதிக்கிறது.

இதில் இலங்கை எவ்விதத்திலும் வித்தியாசப்படாது. இலங்கையிலும் போர் வீரர்கள் உள்ளனர்.

அமெரிக்கா உட்பட்ட ஏனைய ஜனநாயக நாடுகளில் இராணுவத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.

எனினும் வெறுமனே குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அந்த இராணுவங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகின்றனவா?

இலங்கையின் படைவீரர்கள் ஹொலிவூட் படங்களில் வருவதைப் போன்று செயற்படவில்லை. அவர்கள் கடுமையான தீவிரவாதத்தில் இருந்து நாட்டை மீட்டனர்.

இலங்கை ஜனநாயக விழுமியங்களையும் பல்லின பல்மதங்களையும் கொண்டு சமூகத்தை உள்ளடக்கி இருக்கிறது.

இலங்கை பண்டைய கலாச்சாரத்தை கொண்ட நாடு என்பதும் அது காலணித்துவத்தினால் மாற்றப்பட்டது.

இந்த நிலையில் இலங்கையின் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா. பத்தாண்டுகளுக்கு முன்னர் இலங்கையை பயங்கரவாதத்தில் இருந்து மீட்டதில் முக்கிய பங்கு வகித்தவர்.

இந்த நிலையில் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அவரின் நியமனம் குறித்து வெளிநாட்டு அரசாங்கம் ஒன்று கேள்வி எழுப்புவது அமெரிக்காவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவை பாதிக்கும் என எச்சரித்துள்ளார்.

அத்துடன், சவேந்திர சில்வாவின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு ஆதாரமற்ற சுயாதீனமாக நிரூபிக்கப்படாத தகவல்களை கொண்டதாகும்.

எனவே அமெரிக்க அரசாங்கம் இந்த விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.

21ஆம் நூற்றாண்டில் நாம் இருக்கின்ற போதும் எவ்வித பிழைகளையும் புரியாத சவேந்திர சில்வாவின் குடும்ப உறுப்பினர்களும் தண்டிக்கப்படுவது இடைக்கால ஐரோப்பாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட கூட்டுத்தண்டனையை நினைவூட்டுவதாகவும் என குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. பயங்கரவாதம் பல முகம் கொண்டது அரச பயங்கரவாதம் மத பயங்கரவாதம் இன பயங்கரவாதம் எப்படிபல. தனி உரிமைக்கு போராடுவது பயங்கரவாதம் இல்லை, என்றால் இந்தியா பயங்கரவாதத்தால் சுந்திரம் பெற்றத?>

    ReplyDelete