கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நடைபெறவுள்ள பொருளாதார உச்சிமாநட்டிற்கு முன்பதாக கட்டாருடனான உறவுகளை சுமுகமாக்கிக் கொள்ளும் நோக்கில் 2019 டிசம்பரிலிருந்து மேற்கொண்டு வந்த பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்த எந்த முன்னேற்றமும் இன்றி தோல்வியடைந்துள்ளது.
கட்டார் அரசாங்கத்தின் மீது சவூதி அறேபியா அனாவசியமான நிபந்தனைகளை விதித்தமையே பேச்சுவார்த்தைகள் தோல்வியடைவதற்கான காரணம் என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். அதில் ஈரானுடனான உறவை முற்றாகத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்றும் இஸ்ரேலுடனான உறவுகளை சுமுகமாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் ரியாத் விதித்த நிபந்தனைகளை கட்டார் நிராகரித்துள்ளது.
சவூதி அறேபியா, பஹ்ரைன், ஐக்கிய அமீரகம் என்பன வொஷிங்டனின் வேண்டுகோளுக்கு இணங்க இஸ்ரேலுடனான அரசியல் ராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை பலப்படுத்தி வரும் அதேவேளை, பிராந்தியத்திலுள்ள ஏனைய அறபு முஸ்லிம் நாடுகள் இதே கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. இதனை மையப்படுத்தியே கட்டாருடனான பேச்சுவார்த்தையில் ரியாத் ஈடுபட்டு வந்தது. ஏற்கனவே, இம்மூன்று நாடுகளும் முன்வைத்த எட்டு அம்சக் கோரிக்கையிலும் இந்நிபந்தனை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
M P
M P

No comments:
Post a Comment