Wednesday, August 12, 2020

பாராளுமன்றம் போவதற்கு அனுமதி, கோரியுள்ள 'சொக்கா மல்லி'


மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு, வெலிக்கட சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொக்கா மல்லி எனப்படும் ​பிரேமலால் ஜயசேகர, 20 திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற முதல் அமர்வில் கலந்துகொள்வதற்கான அனுமதியைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


சிறைச்சாலைகள் அதிகாரிகளிடம் விடுக்கப்பட்டுள்ள இந்த கோரிக்கை, சிறைச்சாலைகள் தலைமையகத்தால், நீதிமன்ற அமைச்சுக்கு ​அனுப்பப்பட்டுள்ளதாகவும் நீதிமன்ற அமைச்சின் அனுமதிக்கு அமைய, பிரேமலால் 20ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு வருகைத் தரலாம் என்றும் நம்பப்படுகின்றது.


நடை​பெற்ற பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட பிரேமலால் ஜயசேகர, 142,037 வாக்குகளைப் பெற்று மாவட்டத்தில் 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.


 

No comments:

Post a Comment