Wednesday, August 12, 2020

ராஜாங்க அமைச்சுப் பதவியை, அதாவுல்லாஹ் நிராகரித்தாரா...?


முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வுக்கு, வழங்கப்படவிருந்த ராஜாங்க அமைச்சுப் பதவியை, அவர் நிராகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தனக்கு முழு அமைச்சுப் பதவி வேண்டுமென, அதாவுல்லா விரும்பிய நிலையில், அவருக்கு ராஜாங்க அமைச்சுப் பதவியை மாத்திரம் வழங்கவே, அரசாங்க உயர் மட்டம் தீர்மானித்திருந்தது.


ஏற்கனவே 40 ராஜாங்க அமைச்சுகளுக்கான 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் தயார் செய்யப்பட்டிருந்தனர்.


இருந்தபோதும் இன்று (12) புதன்கிழமை  39 பேரே, ராஜாங்க அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றனர்.


அந்த 40 ஆவது பாராளுமன்ற உறுப்பினராக, அதாவுல்லா காணப்பட்டுள்ளார். எனினும் அவருக்கு ராஜாங்க அமைச்சுப் பதவியில் விருப்பமின்மையினால், அவர் அந்தப் பதவியை ஏற்கவில்லை என அறிய வருகிறது.


இதுபற்றி அறிவதற்காக அதாவுல்லா மற்றும் அவரின் ஊடகச் செயலாளர் வசீரை தொடர்புகொண்ட போதும் அவர்கள் பதிலளிக்கவில்லை.

No comments:

Post a Comment