Monday, December 28, 2020

உக்ரைனிலிருந்து 185 சுற்றுலா பயணிகள், விஷேட விமானத்தில் இலங்கையை வந்தடைந்தனர்


உக்ரைனிலிருந்து 185 சுற்றுலா பயணிகளுடன் கூடிய விஷேட விமானம் ஒன்று சற்று முன்னர் மத்தள விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளதாக சுற்றுலாதுறை அமைச்சு தெரிவித்துள்ளது. 

ஸ்கைஅப் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றில் குறித்த பயணிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த சுற்றுலா பயணிகள் 10 முதல் 14 நாட்கள் இலங்கையில் தங்கியிருக்க போவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

அதனடிப்படையில் கொவிட் 19 பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கான வேலைத்திட்டம் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

No comments:

Post a Comment