Friday, December 25, 2020

27ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவிருந்த, ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் தமது பயணத்தை இரத்து செய்தனர்


நாளை மறுதினம் (27) இலங்கைக்கு வருகை தரவிருந்த ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் சிலர் தமது பயணத்தை இரத்து செய்துள்ளதாக, விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரியாரச்சி தெரிவித்துள்ளார்.

COVID – 19 தொற்று நிலைமையினால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில், நாளை மறுதினம் முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையத்தை மீள திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தது.

எவ்வாறாயினும், எதிர்வரும் 27ஆம் திகதி வருகை தரவிருந்த ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் தமது பயணத்தை இரத்து செய்துள்ளனர்.

No comments:

Post a Comment