இது தொடர்பில் முகப்புத்தகத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் மேலும்,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களே!
உடல்களை அடக்கம் செய்வதன் மூலமாக நிலத்தடி நீர் மாசுபடும் என்று நீங்கள் முன் வைத்துள்ள “நிபுணர்” குழு உறுதியாக நம்பினால், அவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகள் தொடர்பான நிரூபனங்களை கீழே நான் குறிப்பிடுகின்ற நிபுணர்களுக்கு முன் வைக்க வேண்டும்:
1. பேராசிரியர் திஸ்ஸ விதாரண
2. பேராசிரியர் மலிக் பீரிஸ்
3. டாக்டர் நிஹால் அபேசிங்க
4. டாக்டர் பாபா பாலிஹவதானா
இந்த முன் வைப்புக்களை நேரடியாக இரு தரப்பும் சந்தித்துதான் முன் வைக்க வேண்டும் என்ற அவசியமில்லை , நவீன தொழிநுட்ப ஏற்பாடுகள் மூலமாகவும் முன்னெடுக்கலாம்...
உங்களால் நியமனம் செய்யப்பட்டிருக்கின்ற நிபுணர் குழுவிற்கும் நுண்ணியல் மற்றும் தொற்று நோயியல் துறையில் உள்ள என்னால் குறிப்பிடப்பட்டுள்ள இந்த நிபுணர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் குறித்த அறிக்கை உடனடியாக பொதுமக்களது கவனத்திற்காக வெளிப்படுத்தப்படுவதோடு, அதற்கான கால வரையறையும் குறிப்பிடப்படல் வேண்டும்.
குறித்த அறிக்கையானது மேலே நான் குறிப்பிட்டிருக்கின்ற சர்வதேச அங்கீகாரம் பெற்ற இலங்கையை சேர்ந்த நான்கு நிபுணர்களாலும் சரி பார்க்கப்பட்டு முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டால், உடல்களை எரிப்பதற்கு எதிரான எனது அனைத்து செயற்பாடுகளையும் அத்தோடு நிறுத்தி விடுகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment