கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிராக 8 வயதுச் சிறுவன் நுஹ்மானும் அவரது தந்தையும், கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று வரை கவனயீர்ப்பு நடைபயணமொன்றை, இன்று (28) ஆரம்பித்தனர்.
இதன்போது, கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், அட்டளைசேனை, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர்களிடம் மகஜர்கள் கையளிக்க ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்து ஜனாஸா எரிக்கப்பட்டவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, துஆப் பிரார்த்தனைகள் செய்த பின்னர் கல்முனை பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். நஸீரிடம் மகஜர் கையளித்து விட்டு நடைபயணம் ஆரம்பமானது.
எனினும், இந்நடை பயணம், நீதிமன்ற உத்தரவின் பேரில் கல்முனை பொலிஸாரால் நிறுத்தப்பட்டது.


No comments:
Post a Comment