காலி-கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை அங்கிருந்து அகற்றும் வரை, பிரேத பரிசோதனை உள்ளிட்ட நீதிமன்ற வைத்திய நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்கத் தீர்மானித்துள்ளதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் நீதிமன்ற வைத்திய பிரிவின் வைத்தியர்களும் ருஹுனு பல்கலைக்கழகத்தின் நீதிமன்ற வைத்திய பிரிவின் வைத்தியர்களும் அறிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, இன்று (23) குறித்த வைத்தியசாலையின் பிரேத பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை என்பதுடன், நீதிமன்ற வைத்தியர்களால் அன்றாடம் முன்னெடுக்கப்படும் வாகன விபத்துகளில் காயமடைந்தவர்களை பரிசோதிப்பது, மது அருந்தும் சாரதிகள் தொடர்பான அறிக்கையை வெளியிடுவது உள்ளிட்ட சகல நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.
இந்த ஜனாஸாவை எரிக்காது, ஒரு தீர்வு வரும்வரை வைத்திருக்குமாறு நீதிமன்றம், ஏற்கனவே உத்தரவிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment