அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த, முஸ்லிம் ஒருவருடைய ஜனாஸா மட்டக்களப்பில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அதனை எரித்துவிட இன்று 25 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், முஜிபுர் ரஹ்மானின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு வரப்பட்டதை அடுத்து, அவர் இதுதொடர்பில் உடனடியாக, வைத்தியசாலை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணாக்கியனும், இதுதொடர்பில் பிரதேச வைத்தியசாலை அதிகாரிகளுடன் பேசியுள்ளார்.
எனினும் ஜனாஸாவை தொடர்ந்து வைத்திருக்க முடியாதெனவும், எரித்துவிட மேலிடத்தினர் உத்தரவிட்டுள்ளதாகவும், குறிப்பிட்டு அந்த ஜனாஸாவை எரித்து விடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் Jaffna Muslim இணையத்திடம் தெரிவித்தார்.

No comments:
Post a Comment