Friday, December 25, 2020

அரிசிமலை விகாராதிபதி மரணம் - உடலை சுமந்துசென்ற உலமாக்கள், பிரதேச முஸ்லிம்கள் பெருமளவில் பங்கேற்பு (படங்கள்)


 - ஹஸ்பர் ஏ ஹலீம் -

அரிசிமலை ஆரன்ய சேனாசன பிரிவிற்குரிய யான்ஓய ரஜமகாவிகாரையின் விகாராதிபதி எலகம்மில்லவ சுகூதிவங்ச தேரர் இறைபதம் அடைந்ததுடன் அவரது இறுதிக்கிரிகைகள் நேற்று அரிசிமலை ஆரண்யவின் சேனாதிபதி பனாமுரே திலவங்ச தேரரின் வழிகாட்டுதலின்கீழ் இறுதி மரியாதையுடன் நடைபெற்றது.

இவ்விறுதிக்கிரிகைகளில் புல்மோட்டை பிரதே முஸ்லிம் உலமாக்கள், பொதுமக்கள், தமிழ் சகோதர ர்கள் இறுதிக்கிரிகைகள் நிறைவுபெறும் வரை கலந்து கொண்டதுடன் முஸ்லிம் உலமாக்கள் தேரரின் உடல் தாங்கிய பேழையை தகனம் செய்யும் இடத்திற்கு தூக்கிச்சென்றமை அனைவர் மத்தியிலும் நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் அண்மையில் புல்மோட்டை பிரதேசத்தில் காலமான உலமா ஒருவரின் இறுதிக்கிரிகைகளில் அரிசிமலை ஆரண்யவின் சேனாதிபதி பனாமுரே திலவங்ச தேரர் தலைமையிலான தேரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தமை இந்நாட்டில் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி இன ஒற்றுமையை வலுப்படுத்த ஏதுவாக அமைந்துள்ளது.

யான்ஓய ரஜமகாவிகாரையின் விகாராதிபதி எலகம்மில்லவ சுகூதிவங்ச தேரரின் இறுதிக்கிரியையில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான கபில நுவன் அத்துக்கோராள , கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள உட்பட பலரும் கலந்து கொண்டனர்.





No comments:

Post a Comment