அகால மரணங்கள் இன்று சர்வ சாதாரணமானவை. இன்று சந்தோஷமாக ஒருவருக்கொருவர் பாசத்தோடு நடந்து கொள்ளும் உங்கள் பிள்ளைகள் நாளை உங்கள் பெயரைச் சொல்லி வசைபாடும் நிலைக்கு வரலாம். நீதிமன்றங்கள் வழியே சீரழிந்து உங்களது குடும்பமும் பெயரும் சின்னாபின்னமாகிப் போகலாம். காரணம்??
நீங்கள் விட்ட பிழை!!
இன்றே உங்கள் உயிலை/இறுதி விருப்பாவணத்தை (last will) எழுதி பதிவு செய்து விடுங்கள். உங்கள் சொத்துகள் நீங்கள் இல்லாமல் போன பிறகு பிள்ளைகள் மத்தியில் எவ்வாறு பிரிந்து செல்லும் என்பதை சரியாகவும் நியாயமான முறையிலும் பிரித்து விடுங்கள்.
உங்கள் உயிலை எழுதாமல் ஒரு இரவேனும் நித்திரை கொள்ள வேண்டாம் என இஸ்லாம் கூறுகிறது. அது மட்டுமின்றி, ஆண் பிள்ளைக்கு இரண்டு, பெண்பிள்ளைக்கு ஒன்று என்ற பங்கு பிரித்தல் முறை, நீங்கள் இறந்த பிறகு உயில் எழுதப்படாத போது (intestate) சொத்துப் பங்கீடாகும். நீங்கள் உயிரோடு இருக்கும் போது ஆண் பிள்ளைக்கும் பெண் பிள்ளைக்கும் சமமாக சொத்தை பிரிக்க உயில் எழுதி வைக்கலாம். அல்லது உங்கள் ஆயுள் உறுதியோடு (life interest) அதாவது, நீங்கள் மற்றும் உங்கள் மனைவி உயிரோடு இருக்கும் வரை சொத்து உங்கள் பொறுப்பில் இருக்க, உங்களுக்கு பிறகு பிள்ளைகளுக்கு பிரிந்து போகும் வண்ணம் அழகான முறையில் அன்பளிப்பு (deed of gift) செய்யலாம்.
அதை விடுத்து, "எனக்கு இன்னும் காலமிருக்கிறது" என்று நினைத்து கொண்டு அகாலமாக அல்லது சாமான்யமாக இறந்து போன பல பெற்றோர்கள் தனது உயிலை எழுதாததன் விளைவாக, சொத்துகளை சரியாக பகிர்ந்தளிக்கும் முறையை குறிப்பிடாமல் போனதன் காரணமாக, அவர்களது பிள்ளைகள் மட்டுமின்றி, மூன்று நான்கு பரம்பரைகள் நீதிமன்றங்களில் கிடந்து சீரழிந்து போகிறார்கள். பரம்பரை பகையாளிகளாக வாழ்கிறார்கள்!!
இன்றே உங்கள் உயிலை/இறுதி விருப்பாவணத்தை எழுதி பதிவு செய்து வைத்து விடுங்கள்!!
சட்டத்தரணி ஷிஹார் ஹஸன்

No comments:
Post a Comment