Monday, February 8, 2021

வெலிகமயில் கொரோனாவால் வபாத்தான, 2 மாத குழந்தையின் குடும்பத்தினருக்கு நிதி அன்பளிப்பு


கொரோனா தொற்றினால் உயிரிழந்த வெலிகம பிரதேசத்தை சேர்ந்த இரு மாத குழந்தையின் குடும்பத்திற்கு வெலிகம நகரசபை உறுப்பினர் எம். எம் அஷ்பாக் அஹமதின் முயற்சியினால் இரு இலட்சம் ரூபா பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

இவரின் வேண்டுகோளின்படி வெலிகம நகரசபை தலைவர் ரெஹான் ஜயவிக்ரமவும் கொழும்பு மற்றும் இலங்கையில் வேறு பகுதிகளில் இருக்கும் அவருடைய சமூக வலைத்தள நண்பர்களும் இணைந்து இதனை அன்பளித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த வெலிகம நகர சபை உறுப்பினர் அஷ்பாக்,

கடந்த ஜனவரி 14 ஆம் திகதி வெலிகம மலபலாவ புதிய தெரு வில் வசிக்கும் முஹம்மத் என்னும் 2 மாத குழந்தை நோய்வாய்பட்டு மாத்தறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தது. பின்னர்பீசீஆர் பரிசோதனையில் அக்குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

குழந்தையின் சடலம் உறவினர்களிடம் வழங்கப்படவில்லை. பின்னர் அக்குழந்தையின் சடலம் தகனம் செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவுவது குறித்து நகர சபை தலைவருடன் கலந்துரையாடினேன். எனது வேண்டுகோளை ஏற்று பாதிக்கப்பட்ட அக்குழந்தையின் குடும்பத்திற்கு நகரசபை தலைவர் ரெஹான் ஜயவிக்ரமவும் அவருடைய சமூக வலைத்தள நண்பர்களுடன் இணைந்து அக்குழந்தையின் குடும்பத்திற்கு ரூபா 2 இலட்சம் வழங்கினார்கள்.

இதற்காக நகர சபை தலைவருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என்றும் அவர் கூறினார். (பா)

No comments:

Post a Comment