Monday, February 8, 2021

இன்று வாங்கிக் கட்டினார் விமல் - கூட்டத்திலும் பங்கேற்கவில்லை


ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், முக்கிய உறுப்பினரான அமைச்சர் விமல் வீரவன்ச இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அறியமுடிகிறது.

அமைச்சர் விமல் கட்சியை விமர்சித்து ஆற்றிய உரை குறித்து, இன்றைய கூட்டத்தில ஆளும் தரப்பு உறுப்பினர்கள் பலர் கடும் எதிர்ப்பை வெளியிட்டதையடுத்து, உறுப்பினர்களுக்கிடையில் கடும் வாதங்கள் இடம்பெற்றுள்ளன.

எனினும், நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாகவே தான் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அமைச்சர விமல் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

No comments:

Post a Comment