- பா.நிரோஸ் -
எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த 10 அரசியல் தலைவர்களின் குடியுரிமையைப் பறிப்பதற்கு அரசாங்கம் சதி செய்வதாகத் தெரிவித்த எதிர்க்கட்சியின் பிரதமக் கொறடாவும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷமன் கிரியெல்ல, இதற்காகவே அரசியல் பழிவாங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான விவாதம், நாளையும் (08) நாளை மறுதினமும் (09) நடைபெறுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதனைக் காலந்தாழ்த்துவதற்கு இடமளிக்க முடியாதெனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment