பள்ளிவாயல்கள் என்பது சமூகத்தின் மிக முக்கிய வகிபாகத்தை பெறுகின்றது. அவற்றின் ஊடாகத்தான் தலைசிறந்த சமூகமொன்றை உருவாக்க முடியும்.
எனவே அவை சிறந்த முறையில் வழிநடாத்தப்படுமாயின் சமூகத்திற்கு மட்டுமல்லாது நாட்டுக்கே பாரிய சேவைகள் ஆற்றும் சமூக நிறுவனங்களாக மாறுகின்றன.
அந்த வகையில் எமது இலங்கை திருநாட்டில் காத்திரமான சமூகப்பணி ஆற்றும் ஒரு மஸ்ஜிதாக தெஹிவலை முஹிய்யத்தீன் ஜும்ஆ மஸ்ஜித் திகழ்கின்றது.
முஸ்லீம் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் சம்பவிக்கின்ற போது அதற்காக பல செயற்திட்டங்களை வகுத்து முஸ்லீம் தலைமைகளுடன் ஒன்றுசேர்ந்து நிறைவான ஓர் தீர்வொன்றை பெறுவதில் பெரும் பங்காற்றுகின்றதை மறக்க முடியாது.
அதுமட்டுமின்றி முஸ்லிம் சமய பண்பாட்டளுவல்கள் திணைக்களம், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் ஏனைய சமூகம் சார்ந்த நிறுவனங்களின் அனைத்து விதமான மாநாடுகள், கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் மற்றும் தஃவா சொற்பொழிவுகள் போன்ற அனைத்திற்கும் சந்தர்ப்பங்கள் வழங்கி வினைத்திறன் மிக்கதாக அவற்றை நடாத்தி முடிப்பதற்கும் ஒத்துழைப்பு வழங்கின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இவற்றை மிகச் சிறப்பாக செய்வதற்கு அல்லாஹ் மனித வளத்தையும் பௌதீக வளத்தையும் அவர்களுக்கு தாராளமாக வழங்கியுள்ளான்.
அது மட்டுமல்லாது பள்ளிவாயலின் பௌதீகக் காரணிகளும் இவற்றுக்கு துனையாக அமைகின்றது.
மேலும் நிர்வாகம், இமாம்கள், ஊழியர்கள் மற்றும் ஊர் மக்களின் மகத்தான பங்களிப்புக்களும் முயற்சிகளும் தான் இத்தகைய உயர்வுக்கும் சேவைக்கும் காரணம் என்பதை இங்கு ஈன்று கூற வேண்டும்.
எனவே இவர்களின் சேவைகளை இதய சுத்தியுடன் (இஹ்லாஸ்) ஏற்று மேலும் சமூகத்திற்காக பங்காற்றும் மஸ்ஜிதாக ஆக்கி வைப்பானாக!
✒️அரபாத் ஸைபுல்லாஹ் (ஹக்கானி)
No comments:
Post a Comment