முஸ்லிம் மக்கள் சார்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் இப்தார் நிகழ்வு இம்முறை கொவிட் கட்டுப்பாட்டு விதிகளுக்கு அமைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரது பங்கேற்புடன் இன்று (05) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹாரிஸ், எஸ்.எம்.எம்.முஷரஃப், அலி சப்ரி ரஹீம், எம்.எஸ்.தவ்ஃபீக், இஷான் ரஹுமான், ஃபைஸல் காசிம் மற்றும் பிரதமரின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு செயலாளர் ஃபர்சான் மன்சூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment