Thursday, March 31, 2022

45 பேர் கைது, 31 பேர் காயம் - சேத விவரங்கள் வெளியாகின


மிரிஹானவில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 பொலிஸ் பஸ், பொலிஸ் ஜீப்,2 மோட்டார் சைக்கிள் மற்றும் தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனம் சேதம்.

மிரிஹானாவில் நேற்று இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்தோர் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது.

இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் விசேட அதிரடிப்படையினர் 15 பேரும், நுகேகொட ASP உட்பட 3 பொலிஸார் மற்றும் மூன்று ஊடகவியலாளர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நான்கு பேர் கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

No comments:

Post a Comment